இந்தியாவின் முதல் ஆழ்கடல் கொள்கலன் மாற்றும் துறைமுகமான “விழிஞ்ஞம்” இன்று திறப்பு
நாட்டின் நுழைவாயிலாகிறது கேரளம்
பிரதமர் மோடி, முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்கிறார்கள்
திருவனந்தபுரம் இந்திய கொள்கலன் போக்கு வரத்தில் (சரக்குகளை தரப் படுத்தப்பட்ட கொள்கலன் களில் எடுத்துச் செல்வதாகும். இது கடல், ரயில், அல்லது சாலை வழி யாகச் செல்லப் பயன்படுகிறது) 75% இலங்கை நாட்டின் கொழும்பு துறைமுகத்தால் கையாளப்படு கிறது. இதனால் நாடு பெரும் அந்நிய செலாவணி இழப்பையும் வருவாய் இழப்பையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், கொள்கலன் போக்குவரத்தை உள்நாட்டிலேயே சீராக்கவும், அந்நியச் செலாவணி இழப்பை தடுக்கும் நோக்கத்தில் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் அருகே விழிஞ் ஞம் துறைமுகத்தை அம்மாநில அரசு அமைத்துள்ளது. கேரளா வின் கனவாக இருந்த விழிஞ்ஞம் துறைமுகம் தற்போது நனவாகி றது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் மற்றொரு பெருமைமிக்க தருணமான விழிஞ் ஞம் சர்வதேச துறைமுகத்தின் முதல் கட்ட தொடக்க விழா வெள்ளி யன்று (மே 2) நடைபெறுகிறது. நாட்டின் முதல் ஆழ்கடலில் கப்பல் மாற்றி சரக்கு ஏற்றும் (டிரான்ஸ் ஷிப்மென்ட்) துறைமுகத்தை பிர தமர் நரேந்திர மோடி காலை 11 மணிக்கு நாட்டிற்கு அர்ப்ப ணிப்பார். துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் துறைமுக அமைச்சர் வி.என். வாசவன் ஆகி யோர் பங்கேற்கிறார்கள். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால், எதிர்க்கட்சித் தலை வர் வி.டி.சதீசன், ஒன்றிய இணை அமைச்சர்கள் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன், சசி தரூர் எம்.பி மற்றும் பலர் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். திறப்பு விழாவிற்கு பின்பு கொ ழும்பு துறைமுகத்தால் கையாளப் படும் இந்திய டிரான்ஸ்ஷிப்மென்ட் சரக்குகளின் பெரும் பகுதி விழிஞ் ஞத்தை அடையும். தெற்காசியா வின் முதல் பகுதியளவிலான தானி யங்கி துறைமுகமான விழிஞ்ஞம், ஆண்டுக்கு 1.5 மில்லியன் டிஇயு கொள்கலன்களைக் கையாளும் திறன் கொண்டது. ஜூலை 11, 2024 முதல் சோதனை ஓட்டமும் டிசம்பர் 3 முதல் வணிக நடவடிக்கையும் நடந்து வருகிறது. 283 கப்பல்கள் ஏற்கனவே வந்துள்ளன. மொத்தம் 6 லட்சம் கொள்கலன்கள் கையா ளப்பட்டுள்ளன.
இயற்கை பேரழிவுகளை வென்று சாதனை படைத்த கேரள அரசு
விழிஞ்ஞம் துறைமுக திட்டத்தை செயல்படுத்தும் போது பல்வேறு இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டன. கட்டுமானப் பொருட்களின் பற்றாக் குறை காரணமாக 3,000 மீட்டர் கரை யின் முன்னேற்றம் மெதுவாக நடந்தன. டிசம்பர் 2017இல் ஒக்கி புயலில் கட்டுமானம் பெரும் சேதத் தை சந்தித்தது. அதே போன்று 2018, 2019 ஆண்டுகளின் பெரு வெள்ளம், வழக்கத்திற்கு மாறான அதிக கடலலைகள், சூறாவளிகள், உள்ளூர் எதிர்ப்புகள் மற்றும் கொ ரோனா நெருக்கடி ஆகியவற்றைக் கடந்தும், மற்ற இடங்களிலிருந்து பாறைகளைக் கொண்டு வந்து திட்டத்தின் முதல் கட்டம் நிறைவ டைந்தது. திட்டப் பகுதியில் தவறான புரி தல்கள் காரணமாக போராட்டங்கள் வெடித்தபோது, கேரள இடது முன்னணி அரசாங்கம் தனது கொள்கையை தெளிவுபடுத்தியது. அதில்,”விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்தை நிறுத்துவதைத் தவிர வேறு எதையும் நாம் விவாதிக்க லாம்” என முதலமைச்சர் பினராயி விஜயன் தனது நிலையை வெளிப்படுத்தினார்.
வரவேற்க தயாராகும் மிகப்பெரிய தாய்க் கப்பல்
மே 1 ஆம் தேதி “எம்எஸ் ஏசி செலஸ்டினோ மேர் ஸ்கா” என்ற மிகப்பெரிய தாய்க் கப்பல் பிர தமர் நரேந்திர மோடியை வர வேற்கும். வெளிப்புற கடலுக்கு வந்துள்ள இந்தக் கப்பல் வியா ழனன்று துறைமுக இறங்கு தளத்தை வந்தடைந்தது. 24,116 டிஇயு கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்தக் கப்பல் 399 மீட்டர் நீளமும் 61 மீட்டர் அகலமும் கொண்டது.